• 1. நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; "நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக" என (ரஸூலாக) அனுப்பினோம்.
  • 2. "என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்று கூறினார்.
  • 3. "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்.
  • 4. "(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்" (என்றும் கூறினார்).
  • 5. பின்னர் அவர், "என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
  • 6. "ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.
  • 7. "அன்றியும்; நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர், மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
  • 8. "பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.
  • 9. "அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.
  • 10. மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன்.
  • 11. "(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
  • 12. "அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.
  • 13. "உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.
  • 14. "நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.
  • 15. "ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
  • 16. "இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
  • 17. "அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.
  • 18. "பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.
  • 19. "அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
  • 20. "அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்" (என்றும் போதித்தார்).
  • 21. நூஹ் கூறினார்: "என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர், அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
  • 22. "மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்."
  • 23. மேலும் அவர்கள்; "உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்" என்றும் சொல்கின்றனர்.
  • 24. "நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர், ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே."
  • 25. ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
  • 26. அப்பால் நூஹ் கூறினார்: "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
  • 27. "நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
  • 28. "என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே" (என்றும் கூறினார்).
பகிர்
logo
logo
logo
logo
logo
  • 1.அல் பாத்திஹா
  • 2.அல் பகரா
  • 3.ஆலு இம்ரான்
  • 4.அன்னிஸா
  • 5.அல் மாயிதா
  • 6.அல் அன்ஆம்
  • 7.அல் அஃராப்
  • 8.அல் அன்ஃபால்
  • 9.அத்தவ்பா
  • 10.யூனுஸ்
  • 11.ஹூது
  • 12.யூஸுஃப்
  • 13.அர் ரஃது
  • 14.இப்ராஹீம்
  • 15.அல் ஹிஜ்ர்
  • 16.அந் நஹ்ல்
  • 17.பனீ இஸ்ராயீல்
  • 18.அல் கஹ்ஃபு
  • 19.மர்யம்
  • 20.தாஹா
  • 21.அல் அன்பியா
  • 22.அல் ஹஜ்
  • 23.அல் முஃமினூன்
  • 24.அந் நூர்
  • 25.அல் ஃபுர்கான்
  • 26.அஷ்ஷுஅரா
  • 27.அந் நம்ல்
  • 28.அல் கஸஸ்
  • 29.அல் அன்கபூத்
  • 30.அர் ரூம்
  • 31.லுக்மான்
  • 32.அஸ் ஸஜ்தா
  • 33.அல் அஹ்ஸாப்
  • 34.ஸபா
  • 35.ஃபாத்திர்
  • 36.யாஸீன்
  • 37.அஸ் ஸாஃப்பாத்
  • 38.ஸாத்
  • 39.அஸ்ஸுமர்
  • 40.அல் முஃமின்
  • 41.ஃபுஸ்ஸிலத்
  • 42.அஷ்ஷூரா
  • 43.அஸ்ஸுக்ருஃப்
  • 44.அத் துகான்
  • 45.அல் ஜாஸியா
  • 46.அல் அஹ்காஃப்
  • 47.முஹம்மத்
  • 48.அல் ஃபத்ஹ்
  • 49.அல் ஹுஜ்ராத்
  • 50.காஃப்
  • 51.அத் தாரியாத்
  • 52.அத் தூர்
  • 53.அந்நஜ்ம்
  • 54.அல் கமர்
  • 55.அர் ரஹ்மான்
  • 56.அல் வாகிஆ
  • 57.அல் ஹதீத்
  • 58.அல் முஜாதலா
  • 59.அல் ஹஷ்ர்
  • 60.அல் மும்தஹினா
  • 61.அஸ் ஸஃப்
  • 62.அல் ஜும்ஆ
  • 63.அல் முனாஃபிகூன்
  • 64.அத்தகாபுன்
  • 65.அத்தலாக்
  • 66.அத்தஹ்ரீம்
  • 67.அல் முல்க்
  • 68.அல் கலம்
  • 69.அல் ஹாக்கா
  • 70.அல் மஆரிஜ்
  • 71.நூஹ்
  • 72.அல் ஜின்
  • 73.அல் முஸ்ஸம்மில்
  • 74.அல்முத்தஸிர்
  • 75.அல்கியாமா
  • 76.அத் தஹ்ர்
  • 77.அல் முர்ஸலாத்
  • 78.அந் நபா
  • 79.அந்நாஸிஆத்
  • 80.அபஸ
  • 81.அத் தக்வீர்
  • 82.அல் இன்ஃபிதார்
  • 83.அல் முதஃப்பிபீன்
  • 84.அல் இன்ஷிகாக்
  • 85.அல் புரூஜ்
  • 86.அத்தாரிக்
  • 87.அல் அஃலா
  • 88.அல் காஷியா
  • 89.அல் ஃபஜ்ரி
  • 90.அல்பலது
  • 91.அஷ் ஷம்ஸ்
  • 92.அல் லைல்
  • 93.அல்லுஹா
  • 94.அஷ்ஷரஹ்
  • 95.அத் தீன்
  • 96.அல் அலக்
  • 97.அல் கத்ர்
  • 98.அல் பய்யினா
  • 99.அஸ்ஸில்ஸால்
  • 100.அல் ஆதியாத்
  • 101.அல்காரிஆ
  • 102.அத் தகாஸுர்
  • 103.அல் அஸ்ர்
  • 104.அல் ஹுமஸா
  • 105.அல் ஃபீல்
  • 106.குறைஷ்
  • 107.அல் மாஊன்
  • 108.அல் கவ்ஸர்
  • 109.அல் காஃபிரூன்
  • 110.அந் நஸ்ர்
  • 111.தப்பத்
  • 112.அல் இஃக்லாஸ்
  • 113.அல் ஃபலக்
  • 114.அந் நாஸ்