• 1. ஹா, மீம்.
  • 2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
  • 3. நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
  • 4. அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
  • 5. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
  • 6. (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
  • 7. நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
  • 8. அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
  • 9. ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
  • 10. ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
  • 11. (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; "இது நோவினை செய்யும் வேதனையாகும்."
  • 12. "எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்" (எனக் கூறுவர்).
  • 13. நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
  • 14. அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்.
  • 15. நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
  • 16. ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
  • 17. அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
  • 18. அவர் (கூறினார்;) "என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
  • 19. அன்றியும், "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
  • 20. அன்றியும், "என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
  • 21. "மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளங்கள்" (என்று மூஸா கூறினார்).
  • 22. (அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). "நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்" என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
  • 23. "என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்" (என்று இறைவன் கூறினான்.)
  • 24. அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி" இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
  • 25. எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
  • 26. இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
  • 27. இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
  • 28. அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
  • 29. ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.
  • 30. நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
  • 31. ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்) நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.
  • 32. நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
  • 33. அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
  • 34. நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்;
  • 35. "எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்."
  • 36. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்."
  • 37. இவர்களும் மேலா? அல்லது `துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
  • 38. மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
  • 39. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
  • 40. நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
  • 41. ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
  • 42. (எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
  • 43. நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
  • 44. பாவிகளுக்குரிய உணவு
  • 45. அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
  • 46. வெந்நீர் கொதிப்பதைப் போல்.
  • 47. "அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
  • 48. "பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
  • 49. "நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
  • 50. "நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்" (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
  • 51. பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
  • 52. சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
  • 53. ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
  • 54. இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
  • 55. அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
  • 56. முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
  • 57. (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும்.
  • 58. அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
  • 59. ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பகிர்
logo
logo
logo
logo
logo
  • 1.அல் பாத்திஹா
  • 2.அல் பகரா
  • 3.ஆலு இம்ரான்
  • 4.அன்னிஸா
  • 5.அல் மாயிதா
  • 6.அல் அன்ஆம்
  • 7.அல் அஃராப்
  • 8.அல் அன்ஃபால்
  • 9.அத்தவ்பா
  • 10.யூனுஸ்
  • 11.ஹூது
  • 12.யூஸுஃப்
  • 13.அர் ரஃது
  • 14.இப்ராஹீம்
  • 15.அல் ஹிஜ்ர்
  • 16.அந் நஹ்ல்
  • 17.பனீ இஸ்ராயீல்
  • 18.அல் கஹ்ஃபு
  • 19.மர்யம்
  • 20.தாஹா
  • 21.அல் அன்பியா
  • 22.அல் ஹஜ்
  • 23.அல் முஃமினூன்
  • 24.அந் நூர்
  • 25.அல் ஃபுர்கான்
  • 26.அஷ்ஷுஅரா
  • 27.அந் நம்ல்
  • 28.அல் கஸஸ்
  • 29.அல் அன்கபூத்
  • 30.அர் ரூம்
  • 31.லுக்மான்
  • 32.அஸ் ஸஜ்தா
  • 33.அல் அஹ்ஸாப்
  • 34.ஸபா
  • 35.ஃபாத்திர்
  • 36.யாஸீன்
  • 37.அஸ் ஸாஃப்பாத்
  • 38.ஸாத்
  • 39.அஸ்ஸுமர்
  • 40.அல் முஃமின்
  • 41.ஃபுஸ்ஸிலத்
  • 42.அஷ்ஷூரா
  • 43.அஸ்ஸுக்ருஃப்
  • 44.அத் துகான்
  • 45.அல் ஜாஸியா
  • 46.அல் அஹ்காஃப்
  • 47.முஹம்மத்
  • 48.அல் ஃபத்ஹ்
  • 49.அல் ஹுஜ்ராத்
  • 50.காஃப்
  • 51.அத் தாரியாத்
  • 52.அத் தூர்
  • 53.அந்நஜ்ம்
  • 54.அல் கமர்
  • 55.அர் ரஹ்மான்
  • 56.அல் வாகிஆ
  • 57.அல் ஹதீத்
  • 58.அல் முஜாதலா
  • 59.அல் ஹஷ்ர்
  • 60.அல் மும்தஹினா
  • 61.அஸ் ஸஃப்
  • 62.அல் ஜும்ஆ
  • 63.அல் முனாஃபிகூன்
  • 64.அத்தகாபுன்
  • 65.அத்தலாக்
  • 66.அத்தஹ்ரீம்
  • 67.அல் முல்க்
  • 68.அல் கலம்
  • 69.அல் ஹாக்கா
  • 70.அல் மஆரிஜ்
  • 71.நூஹ்
  • 72.அல் ஜின்
  • 73.அல் முஸ்ஸம்மில்
  • 74.அல்முத்தஸிர்
  • 75.அல்கியாமா
  • 76.அத் தஹ்ர்
  • 77.அல் முர்ஸலாத்
  • 78.அந் நபா
  • 79.அந்நாஸிஆத்
  • 80.அபஸ
  • 81.அத் தக்வீர்
  • 82.அல் இன்ஃபிதார்
  • 83.அல் முதஃப்பிபீன்
  • 84.அல் இன்ஷிகாக்
  • 85.அல் புரூஜ்
  • 86.அத்தாரிக்
  • 87.அல் அஃலா
  • 88.அல் காஷியா
  • 89.அல் ஃபஜ்ரி
  • 90.அல்பலது
  • 91.அஷ் ஷம்ஸ்
  • 92.அல் லைல்
  • 93.அல்லுஹா
  • 94.அஷ்ஷரஹ்
  • 95.அத் தீன்
  • 96.அல் அலக்
  • 97.அல் கத்ர்
  • 98.அல் பய்யினா
  • 99.அஸ்ஸில்ஸால்
  • 100.அல் ஆதியாத்
  • 101.அல்காரிஆ
  • 102.அத் தகாஸுர்
  • 103.அல் அஸ்ர்
  • 104.அல் ஹுமஸா
  • 105.அல் ஃபீல்
  • 106.குறைஷ்
  • 107.அல் மாஊன்
  • 108.அல் கவ்ஸர்
  • 109.அல் காஃபிரூன்
  • 110.அந் நஸ்ர்
  • 111.தப்பத்
  • 112.அல் இஃக்லாஸ்
  • 113.அல் ஃபலக்
  • 114.அந் நாஸ்