1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).